
இந்தியாவில் 100 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன்
பாலிவுட் டிராக்கரான தரன் ஆதர்ஷ் "ஸ்பைடர்மேன்" படத்தின் வசூல் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலேயே 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார். நிகர வசூல் 79 கோடி, அதில் வியாழன் 32.67 கோடி, வெள்ளி 20.37 கோடி, சனி 26.10 கோடி வசூலித்துள்ளதாம். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக வசூலித்த "சூர்யவன்ஷி" படத்தின் நிகர வசூலான 77 கோடியை "ஸ்பைடர்மேன்" முந்தியுள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை 446 கோடி வசூலுடன் 2019ல் வெளிவந்த "அவஞ்சர்ஸ் என்ட்கேம்" வைத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!