
அம்மா கூட்டத்தில் கீர்த்தி சுரேஷ்
மலையாள நடிகர் சங்கமான "அம்மா" சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து 2021 மற்றும் 2024க்கான நிர்வாகக் குழுவினர் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாகக் கலந்து கொண்டார். மோகன்லால், மம்முட்டி மற்றும் சில மலையாள நடிகர்கள், நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “அம்மா" கூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்கிறேன். எனது அபிமான நண்பர்கள், சக நடிகர்கள், நடிகைகளை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!