
முதல் நாள் வசூலில் சாதனை படைத்த புஷ்பா
அல்லு அர்ஜுன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது. இப்படம் மூலம் பான்-இந்தியா ஸ்டார் ஆக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளார்.
அவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியாக அதிகமான பார்வைகளைப் பெற்ற படங்களாக உள்ளன. ஆனால், அவரது படங்கள் தெலுங்கில் வெளிவரும் நாளில் ஹிந்தியிலும் வெளியாவது "புஷ்பா" படத்தில்தான் நடந்துள்ளது.
இத்தனைக்கும் ஹிந்தியில் படத்தை பெரிய அளவில் பிரமோஷனும் செய்யவில்லை. இருந்தாலும் அங்கு முதல் நாளில் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
தமிழில் கூட நேற்று இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழிலும் படத்தை சரியாக பிரமோஷன் செய்யவில்லை. பத்திரிகையாளர் காட்சியைக் கூட நாளைக்குத்தான் நடத்துகிறார்கள். தெலுங்கில் காட்டிய அக்கறையை மற்ற நான்கு மொழிகளுக்கும் காட்டியிருந்தால் இப்படம் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என டோலிவுட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!