
லட்சுமிமேனனுக்கு ஜோடி யோகி பாபு : பரவும் தகவல்
இந்த நிலையில் தற்போது புதுமுக இயக்குனர் முருகேஸ் பூபதி என்பவர் இயக்கும் ஒரு படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் . காதல் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக காமெடியன் யோகி பாபு நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக காமெடியாக நடித்து வந்தபோதும் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் இருவருமே காதலிப்பது போன்று தான் படம் இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் இந்த படம் வழக்கத்திலிருந்து ஒரு மாறுபட்ட காதல் கதையில் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!