
இறுதி கட்டத்தில் நெஞ்சுக்கு நீதி
இதில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்புகள் தாமதமானது. தற்போது உதயநிதி மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பாகும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!