
6 விருதுகளை வென்ற சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
ஆடியோ கிராபியில் கோல்ட் மெடல் வாங்கிய நாயகன், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் டாக்குமென்ட்ரிக்காக நாயகி வனப்பகுதிக்கு வர, அவருக்கு உதவியாக நாயகன் செல்கிறார். இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியினுள் படப்பிடிப்பு குழுவினர் நடந்தே சென்று படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
கோவா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று 6 விருதுகளை வென்றுள்ள இந்த படம் டிச.,24ல் தியேட்டர்களில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!