
நெருப்புடன் சாகசம் செய்யும் கீர்த்தி பாண்டியன்
அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஷாலினி இயக்கத்தில் உருவாகும் "கண்ணகி" படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட பிகினியில் உடையில் போட்டோக்களை பதிவிட்டார்.
இந்நிலையில் பிரபல கலைஞர்களுடன் இணைந்து தீயை ஊதும் வித்தை, உடம்பில் நெருப்பை தேய்ப்பது மாதிரியான சாகசங்களை செய்யும் வீடியோ கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் துணிச்சல்லுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!