
எதற்கும் துணிந்தவன் - வாடா தம்பி பாடலுக்கு வரவேற்பு
டிச 16, 2021
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வாடா தம்பி என்ற பாடல் நேற்று மாலை 6மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் - அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள். பாடல் வெளியான 20 மணிநேரத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 2.83 லட்சம் லைக்குகளும் கிடைத்தன. தற்போது இந்த பாடல் சோஷியல் மீடியாவில் வைரலானது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!