வெளிநாட்டு பெண்ணைத் தேடும் சிவகார்த்திகேயன்
டிச 15, 2021
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தென் இந்திய மொழிகளிலேயே பிரபலமாகி விட்டார். தெலுங்கிலும் இந்த படம் ஹிட் அடித்தது. கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் வெளிநாட்டு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்வதாகக் கதையாம். எனவே படத்திற்காக எமி ஜாக்சன் மாதிரியான வெளிநாட்டு பெண்ணை தேடும் முயற்சியில் தீவிரம் காண்பித்து வருகின்றனராம். கதாநாயகியை கண்டுபிடித்ததும் ஜனவரியில் படப்பிடிப்பைத் துவங்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!