
‛வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் - வைரலாகும் அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ
முழுக்க முழுக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. கூடவே கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டது, ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது உள்ளிட்ட விஷயங்களையும் இதில் இணைத்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் வரும் வீலிங் காட்சி ஒன்றில் அஜித் நடித்துள்ளார். அதை படமாக்கியபோது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இருப்பினும் அசராத அஜித் வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த பைக் வீலிங் காட்சியை அசத்தலாக நடித்துள்ளார். வீடியோவில் இடம் பெற்ற இந்த காட்சியை பற்றி குறிப்பிட்டு அஜித்தின் அசராத முயற்சியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
‛வலிமை" மேக்கிங் வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களில் வைரலாகி டிரெண்ட் ஆகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!