
இளையராஜா இசையில் வெளியான ‛மாயோன் பட பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது
டிச 14, 2021
Advertisement
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் "மாயோன்". அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக தன்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து "மாயோனே மணிவண்ணா.." என்ற பாடலை வெளியிட்டனர். கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனி - காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இளையராஜாவின் இசையில் பாடி உள்ளனர். இந்த பாடல் வெளியான வெளியான 48 மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!