
கிளாமரில் அசத்தும் 30+ நடிகைகள்
எந்தவிதமான டிரஸ்களும் அவர்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், பாடல் காட்சிகளில் அவர்கள் தங்களை மிக அழகாகக் காட்டிக் கொள்ள விதவிதமான கிளாமர் ஆடைகளை அணிவதையும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நடிகைகள் நால்வருக்குமே வயது 30ஐக் கடந்துவிட்டது. இருந்தாலும் அவர்கள் 20 + நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு நடித்து வருகிறார்கள்.
நடிகை சமந்தா "புஷ்பா" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் யு டியூபில் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையையும் படைத்தது. அந்தப் பாடலில் சமந்தாவின் கிளாமரான ஆடை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஏற்கெனவே நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால் அப்படியான கிளாமர் ஆடையில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அவர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு சமந்தாவுக்குக் கிடைத்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!