
மாறன் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார்
இப்படம் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் ஜிவி பிரகாஷ் கொடுத்திருந்தார். “மாறன்" இசை வேலைகள் கடைசி கட்டத்தில் உள்ளன. படத்தில் நான்கு பாடல்கள், "மாறன்" தீம் மியூசிக்கும் உண்டு. இசை விரைவில் வெளியாகும்,” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன்பிறகும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இன்று மீண்டும் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜிவி. அதில், “மாறன்" பின்னணி இசை இன்று ஆரம்பம். ஆக்ஷன் நிறைந்த பின்னணி இசையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!