
தமிழ்ப் பெண் போல வந்த ஆலியா பட்
நிகழ்ச்சியில் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், தலையில் மல்லிகைப் பூ அணிந்து ஒரு மாடர்ன் தமிழ்ப் பெண் போல வந்தார் ஆலியா பட். “எல்லோருக்கும் வணக்கம்" என தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன்பு வந்த "2 ஸ்டேட்ஸ்" படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்தேன். சென்னை வருவது மகிழ்ச்சிதான். “ஆர்ஆர்ஆர்" படத்தில் நடித்தது உற்சாகமான ஒரு விஷயம். அதன்பின் என் மீது நிறைய பேர் அன்பு செலுத்தினார்கள். கனவு நனவாது போல் இருந்தது, டிரைலரைப் பார்த்த போது, என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் ஆலியா பட் வந்து கலந்து கொண்டது பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் "ஆர்ஆர்ஆர்" மலையாள டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஆலியா கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வரவில்லை என நினைத்தார்கள். மாறாக "ஆர்ஆர்ஆர்" தமிழ் பட பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!