
ஷெர்லக் படத்தில் பஹத் பாசிலின் அக்காவாக நதியா
பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று உருவாகிறது. அந்தப்படத்தில் இந்த ஷெர்லக்கும் ஒரு படமாக உருவாகிறது. அவரது ஷெர்லக் என்கிற சிறுகதையை தழுவி இந்தப்படம் எடுக்கப்படுவதால் படத்திற்கும் அதே பெயரையே டைட்டிலாக வைத்துள்ளார்கள்.
இந்தப்படத்தில் பஹத் பாசிலின் அக்காவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நதியா. 38 வருடங்களுக்கு முன் இயக்குனர் பாசிலின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நதியா இப்போது அவரது மகன் படத்திலும் இணைந்து நடிக்கிறார் என்பது ஆச்சர்யமான ஒன்று. ஜனவரி மாதம் கனடாவில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!