
ஓடிடி பிலிம்பேர் விருது பெற்ற சமந்தா
2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. சிறந்த சீரிஸை இயக்கியதற்கான விருது "ஸ்கேம் 1992" படத்தை இயக்கிய ஹன்சல் மேத்தாவிற்கு வழங்கப்பட்டது. அத்தொடரில் நடித்த பிரதிக் காந்தி சிறந்த நடிகருக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார். "தி பேமிலி மேன்" சீரிஸில் நடித்ததற்காக சமந்தா சிறந்த நடிகைக்கான (சீரிஸ்) விருதைப் பெற்றார்.
சிறந்த ஒரிஜனல் கதைக்கான விருது "பேமிலி மேன்" சீரிஸிற்கும், சிறந்த ஒரிஜனல் திரைக்கதைக்கான விருது "பேமிலி மேன் 2" சீரிஸிற்கும், சிறந்த வசனத்திற்கான விருது "ஸ்கேம் 1992" சீரிஸிற்கும், சிறந்த திரைக்கதைத் தழுவல் விருது "ஸ்கேம் 1992" சீரிஸிற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சமந்தா அதற்காக பேமிலிமேன் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!