
தூசி தட்டப்படும் சதுரங்க வேட்டை 2
இந்த படம் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்தது. தற்போது இதனை ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் சார்பில் முத்து சம்பந்தம் வாங்கி வெளியிடுகிறார். இவர் தற்போது 2030 என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தை வெளியிடுவது தொடர்பாக அவர் கூறியதாவது: சதுரங்க வேட்டை இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சிகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.
எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை வெளியிட ஏதுவாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!