
வலிமை அம்மா பாடல் : சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி
தற்போது அஜித் நடித்துள்ள "வலிமை" படத்தில் ஒரு அற்புதமான அம்மா பாடலைப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில், விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ள "நான் பார்த்த முதல் முகம் நீ…" என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் முறை கேட்கும் போதே பாடல் ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அம்மாவின் பாசம், நேசம் என அனைத்தையும் பாடலில் கொண்டு வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். யுவனின் மென்மையான இசை அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது.
இப்பாடலைப் பற்றி பாடகர் சித் ஸ்ரீராம், “சாதனையாளர் அஜித்தின் "வலிமை" படத்தில் இந்தப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது. சகோதரர் விக்னேஷ் சிவனின் உறைக்க வைக்கும் வரிகளை, சகோதரர், ஒப்பற்றவர் யுவனின் இசையில் பாடும் அனுபவம் எப்போதும் வியக்க வைக்கும். அனைத்து அம்மாக்களுக்கம் இந்தப் பாடல் காணிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!