
வலிமை அம்மா பாடல் - டிரெண்டிங்கில் முதலிடம்
இந்நிலையில் வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. அம்மாவை போற்றும் விதமாக உருவாகி உள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். "நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ" என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட இந்த பாடல் யூடியூபில் இன்று காலைக்குள்(15 மணிநேரத்தில்) 22 மில்லியன் பார்வையாளர்களையும் 4 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!