
காதலன் மீது மோசடி புகார் கொடுத்த பிக்பாஸ் ஜூலி!
இந்நிலையில் அவர் சென்னை அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "அமைந்தகரையில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வரும் மனிஷும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்து இருவரும் பழகி வந்தோம். அந்த நாட்களில் என்னிடமிருந்து இருச்சக்கர வாகனம், 2 பவுன் சங்கிலி என இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேலாக வாங்கி கொண்டார். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் தொடர்ந்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியதுடன் பண மோசடியும் செய்த மனிஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் கொடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!