
இந்தியன் 2 - காஜல் வேடத்தில் தமன்னா?
இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் இந்தியன்-2 படத்தை இயக்க ஷங்கர் ஒப்புக் கொண்டார். அதனால் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த ஆண்டில் இந்தியன்-2வை ஷங்கர் தொடருவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், தான் கர்ப்பமாகியிருப்பதை சொல்லி விலகிக் கொண்டார். அதனால் தற்போது அவர் வேடத்தில் நடிப்பதற்கு தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்த தமன்னா அடுத்தபடியாக இந்தியன் 2வில் இணைவதோடு, கமல், ஷங்கர் கூட்டணியிலும் முதன்முதலாக இணைந்து நடிக்கப்போகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!