அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய்
டிச 01, 2021
Advertisement
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லி. தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான், நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய், அதன்பிறகு மீண்டும் அட்லியுடன் இணைகிறாராம். அதனால் ஷாரூக்கான் படத்தை இயக்கி முடித்ததும் விஜய் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்குகிறார் அட்லி.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!