
பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் அம்மன் படம்
இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வருகிறது. இதில் கவுசல்யா அம்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார், ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கிருஷ்ணா கூறியதாவது: வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்? திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது. அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை பக்தி கலந்து படம் விவரிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வெளிவருகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!