
வெளியீட்டுக்கு தயாரான பன்னிக்குட்டி
தற்போது இந்த படம் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. 11.11 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் பிரபு திலக் வெளியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்கள் தயாரிப்பு நிறுவனம் பன்னிக்குட்டி படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்காக லைகா நிறுவனத்துடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!