
அப்பா நலமுடன் இருக்கிறார் - கமல் மகள் ஸ்ருதிஹாசன்
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கமல் பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமல் நலம்பெற வேண்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அதில் "எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!