
முன்னாள் கணவருக்கு சமந்தா வாழ்த்து சொல்ல வேண்டுமா?
திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக பிஸியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட் வரை செல்லும் ஆவலில் இருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லவில்லை என சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
சமந்தா தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என பதிலுக்கு கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!