
பூஜா ஹெக்டேவின் கனவு ஆரம்பம்...
தற்போது பூஜாவின் கனவு நிறைவேற ஆரம்பித்துள்ளது. ஆம், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியுள்ளது.
அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மனிதர், மேதை, அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. எனது கனவுப் பட்டியலை "டிக்" செய்ய ஆரம்பித்துவிட்டேன். மேலும் தகவல்களுக்குக் காத்திருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸ் ஜோடியாக "ராதே ஷ்யாம்" படத்திலும், சிரஞ்சீவி நடிக்கும் "ஆச்சார்யா" படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் "சர்க்கஸ்" படத்தில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!