
ரசிகர்களை ஏமாற்றிய புகழ்
அந்த வரிசையில் "குத் வித் கோமாளி" புகழ் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தனது முதல் படமான "சபாபதி" படத்தில் புகழ் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமேதான் நடித்திருந்தார். அதிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. அது ரசிகர்களுக்கு எமாற்றமாகிவிட்டது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது சந்தானம் முன்னெச்சரிக்கையாக என்னையும், புகழையும் எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்துள்ளது.
இருந்தாலும் புகழ் அடுத்தடுத்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் டிவியைப் போலவே ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்று நம்புவோம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!