
வலிமை - பரபரப்பான வியாபாரம் ஆரம்பம்
"வலிமை" படத்தின் தமிழக வினியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து வாங்கியுள்ளன. தற்போது ஏரியா வாரியாக படத்தை விற்கும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில் இப்போதே வியாபாரப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. "வலிமை" படத்துடன் பொங்கலுக்குப் போட்டியாக வேறு பெரிய படங்கள் வர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலைமை. எனவே, படத்தை வாங்க பலரும் போட்டி போடுவதாகத் தகவல்.
அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் "வலிமை" படத்தைப் பார்க்க அஜித் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!