28 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி
நவ 19, 2021
Advertisement
நடிகை ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆகிவிட்டது. தென்னிந்திய மொழிகளில் இதுவரை 699 படங்களில் நடித்துள்ள ஊர்வசியின் 700-வது படமாக உருவாகிறது அப்பத்தா. இதில் அப்பத்தாவாக வயதான கேரக்டரில் நடிக்கிறார் ஊர்வசி. இயக்குனர் பிரியதர்ஷன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இதற்குமுன் 1993ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிதுனம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி, சரியாக 28 வருடங்கள் கழித்து அவரது டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார். மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்" என்கிற பிரமாண்ட வரலாற்று படத்தை இயக்கிவிட்டு அப்பத்தா என்கிற சிறிய படத்தை பிரியதர்ஷன் இயக்குவது ஆச்சர்யமான விஷயம்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!