
எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இன்று படத்தின் அப்டேட் வெளியாகும் என அறவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படம் பிப்ரவரி 4ல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவுக்கு பிப்ரவரி 3 பிறந்தநாள். அதற்கு மறுநாள் சூர்யா படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட எண்ணியிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் பிப்ரவரிக்கு இந்த படத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!