
பாலிவுட்டில் கால்பதிக்கிறார் மஹத் ராகவேந்திரா
ஹிந்தியில் நடிப்பது பற்றி மஹத் கூறுகையில், ‛‛பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள நண்பர் சுதீஷ் சென், என்னை பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்ய சொன்னார். இப்பட ஆடிசனில் பங்கேற்று தேர்வானேன். சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி போன்ற பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் உடன் நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் இருவரும் என்னிடம் இயல்பாக பழகியதோடு படத்தில் சிறப்பாக நடிக்க நம்பிக்கை தந்தனர். இன்னொரு சக நடிகரான ஜாஹிரை சகோதரராக உணர்ந்தேன். அந்தளவுக்கு படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்தார். பாலிவுட்டில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஹிந்தி பேச மனைவி பிராச்சி உதவினார். பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம் இருக்கும். நான் நினைத்தே பார்த்திராத ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி. லண்டனில் படப்பிடிப்பு முடிந்து தற்போது டில்லியில் படப்பிடிப்பு நடக்கிறது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!