
என் இசை பிடிக்காததால் வெளியேறினேன் : தமன்
தான் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமன். அந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த தமன், பின்னணி இசை வேலையையும் முழுதாக முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் நானிக்கு அவர் உருவாக்கிய பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ள தமன், “எனது சினிமா பயணத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. எல்லா படங்களுக்கும் இசையமைப்பது போன்று முழு அர்ப்பணிப்புடன் தான் இசையமைத்தேன்.. எந்த இடத்தில் அவர்களுக்கு தவறாக மாறிப்போனது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!