
மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அங்கு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் விஜய் மோதுவது போன்ற ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் விஜய் துப்பாக்கி படத்தை போலவே ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனபோதிலும் காஷ்மீரில் அந்த சண்டை காட்சியை செட் அமைத்து படமாக்க முடியாத சூழல் இருப்பதால் அந்த காட்சியை ஜார்ஜியாவில் செட் போட்டு படமாக்கப்போவதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்தப்படமும் துப்பாக்கி பட சாயலிலேயே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!