
இந்தியாவில் தயாராகும் சூப்பர் ஹீரோயின் படம்
இந்த நிலையில் சூப்பர் ஹீரோயின் படமாக உருவாகி வருகிறது கிரவுன் என்ற படம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இதில் சூப்பர் ஹீரோயினாக மிஸ்.இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார். மேலும் ஹாலிவுட், அரபிக், சீனா, தென் கொரியா நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார். இவர் மலேசிய தமிழர். ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள், மரியா ஜெரால்டு இசை அமைக்கிறார். கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!