
அடுத்தடுத்து வெளிவரப் போகும் பிரபுதேவா படங்கள்
அவர் நாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் "தேவி 2". அதற்கடுத்து அவர் நடித்து வந்த "பொன் மாணிக்கவேல், தேள், யங் மங் சங்" ஆகிய படங்கள் அப்படியே முடங்கி இருந்தன. அந்தப் படங்கள் முடிந்து சில வருடங்களான பிறகும் அவை எப்போது வெளிவரும் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அவர் நாயகனாக நடித்த "பொன் மாணிக்கவேல்" படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவர் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான "தேள்" படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று நடைபெற்றது. விரைவில் இந்தப் படமும் வெளியாக உள்ளது. இந்தப் படங்களை அடுத்து "யங் மங் சங்" படமும் வெளிவரும் எனத் தெரிகிறது.
பிரபுதேவா தற்போது "பாகீரா" படத்திலும், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!