
தமிழ் ரசிகர்கள் புத்திசாலி : பிரபுதேவா
படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட பிரபுதேவா பேசும்போது, ‛‛ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். அவரது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். தேள் படத்தில் ஆடல், பாடல், வசனம், காமெடி அதிகம் இல்லாத ஒரு இயல்பான கதை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படம் வித்யாசமான அனுபவத்தை கொடுத்தது. தமிழ் ரசிகர்கள் புத்திசாலி அதுதான் கொஞ்சம் பயமே என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!