
நயன்தாராவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்
யுவராஜ் சொன்ன கதை பிடித்து தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதாம். அதனாலேயே அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!