
கிராமத்து ஸ்டைல் வெப்சீரிஸில் கணேஷ் வெங்கட்ராம்
‛‛நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக் கொள்வது மிக முக்கியம். வித்தியாசமான தோற்றம் புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும். அடுத்து இரண்டு வெப்சீரிஸ்களில் இந்த தோற்றத்திலேயே நடிக்கிறேன் என்கிறார் கணேஷ்.
இதுப்பற்றி கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‛‛கொரோனா ஊரடங்கில் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. 10 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி பார்க்கும் நேரத்தில், வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும் என்றார்.
அடுத்ததாக இரண்டு வெப்சீரிஸ் தொடர்களில் இந்த புதிய தோற்றத்தில் இவர் நடிக்கவுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!