
இந்தியன் 2 நாயகி - த்ரிஷா, சமந்தாவிடம் பேச்சு?
காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப்படம் காத்துக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் - லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் படத்திலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல் வெளியானது. படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால் படத்துக்கான நாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது திரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!