
புஷ்பா - ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா
இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார் சமந்தா. இயக்குனர் சுகுமார் கேட்டுக் கொண்டதற்காக இப்படி நடனமாட சம்மதித்துள்ளாராளம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அல்லு அர்ஜுனுடன் இணைந்து அந்தப் பாடலில் சமந்தா நடிக்கப் போகிறாராம். சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால், இந்தப் பாடலை மிகவும் ஸ்பெஷலாகப் படமாக்க உள்ளார்களாம்.
இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு நடிகைக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளங்களிலேயே இதுதான் அதிகம் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!