
மழை தாக்கம் - டிராப் ஆன தீபாவளி படங்கள் வசூல்
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று வரை மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக கடந்த ஐந்தாறு நாட்களாகவே தியேட்டர்களில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ஆனால், "அண்ணாத்த" படத்தின் வசூல் 200 கோடி, "எமினி" படத்தின் வசூல் 20 கோடி என சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக வசூல் நிலைமை மோசம் என்பதால் அவ்வளவு வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
மழை வெள்ளத் தாக்கத்தால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் வருவதும் சந்தேகம். உண்மை நிலை இப்படியிருக்க படங்களின் வசூலை வேண்டுமென்றே உயர்த்திக் காட்ட "டிராக்கர்கள்" என்ற போர்வையில் சிலர் செயல்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!