
வலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியிடுங்கள் - ரசிகர்கள் கோரிக்கை
சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களை பல மொழிகளில் வெளியிடுவது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் வலிமை படத்தை ஹிந்தியில் வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கூடவே, வலிமை படத்தின் ஹிந்தி டிரைலரையும் வெளியிடுங்கள் என்று பதிவிட்டு, டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் வலிமை படம் தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகலாம் என தெரிகிறது.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ள நிலையில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாநடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!