
தெலுங்கிற்கு செல்கிறார் அதுல்யா ரவி
இந்த நிலையில் தற்போது அவருக்கு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி அகிலை நாயகனாக வைத்து இயக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏஜென்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மம்முட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அதோடு சாக்ஸி வைத்தியா என்பவர் நாயகியாக கமிட்டாகி இருக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக அதுல்யாவிடம் பேசி வருகின்றனர்.
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத அட்டக்கத்தி நந்திதா, நிவேதா பெத்துராஜ், நிவேதா தாமஸ் போன்ற நடிகைகள் தெலுங்கிற்கு சென்று நடித்து வரும் நிலையில் தற்போது அதுல்யா ரவியும் ஏஜென்ட் படம் மூலம் தெலுங்கில் சென்று நடிக்க உள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!