
ஜெய் பீம் - சர்ச்சைக்குரிய காலண்டர் படம் நீக்கம்
அதே சமயம் படத்தில் கொடுமைக்கார போலீசாக நடித்த கதாபாத்திரத்தை வன்னியர் போன்று சித்தரித்ததற்கு அந்த சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். படத்தின் வசனங்களுக்காக உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவர் இந்த தவறான சித்தரிப்பிற்கு தனது கண்டனப் பதிவை முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
படத்தில் ஒரு காட்சியில் வீட்டில் அந்த கொடுமைக்கார போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் பேசிய போது பின்னணியில் இருந்த நாளிதழ் காலண்டரில் தீச்சட்டி படம் இடம் பெற்றது. அந்தக் குறியீடுதான் வன்னியர்களின் எதிர்ப்புகளுக்குக் காரணம்.
பின்னர் தன்னைத் தொடர்பு கொண்ட இயக்குனர் விரைவில் அந்த காலண்டரில் இடம் பெற்ற தீச்சட்டி படத்தை சாமி படமாக மாற்றுவதாகவும் உறுதியளித்தாக எழுத்தாளர் கண்மணி எழுதியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்தக் காட்சியில் இடம் பெற்ற காலண்டர் படம் சாமி படமாக மாற்றப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!