
தீபாவளி போட்டியில் இணைந்த ஆபரேஷன் ஜுஜுபி
இந்நிலையில் "ஆபரேஷன் ஜுஜுபி" என்ற படமும் நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் இந்த சிறிய படமும் தைரியமாக வருகிறது.
இந்தப் படத்தை அருண்காந்த் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருகிறார், சாம்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் வினோதினி வைத்யநாதன், படவா கோபி, மனோபாலா, சந்தானபாரதி, வையாபுரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அரசியல் பேன்டஸி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்களாம். இப்படம் வெளியாவது பற்றிய அறிவிப்பை சாம்ஸ், “அப்பாடா, ஒரு வழியா இறங்கியாச்சு, இனி, முடிவு மக்கள் கைகளில்...நடப்பவை நன்மைக்கே,” என பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!