
ஒரே நாளில் மிர்ணாளினி ரவியின் 2 படங்கள் வெளியீடு
விஜய் சேதுபதி, சமந்தா நடித்த "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் கிளைமாக்சில் வரும் ஏலியன் ஆக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டிக் டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி. அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த "சாம்பியன்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் அதே வருடம் வெளிவந்த "கட்டலகொன்டா கணேஷ்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த "எனிமி, எம்ஜிஆர் மகன்" ஆகிய படங்கள் வெளியாகின்றன. தியேட்டர்களில் வெளியாகும் "எனிமி" படத்தில் விஷால் ஜோடியாகவும், ஓடிடி தளத்தில் வெளியாகும் "எம்ஜிஆர் மகன்" படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருட தீபாவளி சிங்கிள் தீபாவளி, ஆனால், மிர்ணாளினிக்கு மட்டும் டபுள் தீபாவளி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!