
வெளிநாடுகளில் 1193 தியேட்டர்களில் அண்ணாத்த வெளியீடு
அமெரிக்காவில் அதிகபட்சமாக 677 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் 117, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 85, ஐரோப்பிய நாடுகளில் 43, யுனைட்டெட் கிங்டம் 35, சிங்கப்பூர் 23, கனடா 17 என மொத்தமாக 1193 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் "அண்ணாத்த" தானாம்.
தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களிள் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, வட இந்தியா என 1000 தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. நாளைக்குள் இந்த விவரங்கள் தெரிய வரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!