
புதிய டெக்னாலஜியில் வெளியாக உள்ள புனித் கடைசிப்படம்
அதற்காக மும்பையில் உள்ள ஒலிப்பதிவு ஸ்டுடியோ ஒன்றை அணுக உள்ளார்களாம். புதிய டெக்னாலஜியின் மூலம் புனித் நேரடியாகப் பேசியவற்றை தரம் உயர்த்தி டப்பிங் பேசினால் என்ன ஒரு தெளிவு கிடைக்குமோ அதைக் கிடைக்க வைக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.
"யு டர்ன்" படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் புனித் நடிப்பதாக இருந்த "த்வித்வா" படம் இந்த மாதம் ஆரம்பமாவதாக இருந்தது. மேலும் சில படங்களிலும் அவர் நடிக்க முடிவு செய்திருந்தார். இவையனைத்தும் இப்போது கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டது.
"ஜேம்ஸ்" படம்தான் புனித் ராஜ்குமார் நடித்து கடைசியாக வெளிவர உள்ள படமாக அமைய உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!