
கடைசியாக அண்ணன் பட விழாவில் கலந்து கொண்ட புனித் ராஜ்குமார்
கடந்த சில மணி நேரமாகவே அவர் மறைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அவர் மறைந்த செய்தி வெளியில் வந்தது. பல சினிமா பிரபலங்கள் உடனடியாக இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
புனித் ராஜ்குமாரின் அண்ணனான சிவராஜ்குமார் நடித்துள்ள "பஜ்ராங்கி 2" என்ற படம் இன்று தான் தியேட்டர்களில் வெளியானது. அண்ணன் படத்திற்காக 7 மணி நேரங்களுக்கு முன்பு டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் புனித்.
இரு தினங்களுக்கு முன்பு அப்படத்திற்காக நடைபெற்ற விழா ஒன்றில் புனித் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதில் "கேஜிஎப்" நடிகர் யஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இரு தினங்களுக்கு முன்பு சினிமா நிகழ்வில் கலந்து கொண்டவர், காலையில் டுவீட் போட்டவர் மதியம் இல்லை என்பது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!